ஸன்பிரிண்ட்ஸ் (R. சுந்தர் ராஜ்), சென்னை, இந்தியா
SUNPRINTS / ஸன்பிரிண்ட்ஸ் / सन्प्रिंट्स
 
ENGLISH
TAMIL
HINDI
 
CONTACT
 
PURCHASE
 
One Man -
அப்படி என்றால்
என்ன.....?

"ஸன் ஈஸி அபாகஸ்"

இப்போது சிடி வடிவில் உங்களுக்கு கிடைக்கிறது.


      நினைவு ஆற்றலை வளர்ப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே "அபாகஸ்" என்னும் கைக் கருவி உபயோகப் படுத்தப்பட்டு வந்தது. அது நிலையான பயனையும் தந்தது. அதை ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றுவித்து வந்ததால் மாணவர்களுக்கு சிறப்பான நினைவுத் திறனை வளர்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் ராடின் (Rod) மதிப்பு எந்த விதத்திலும் குறிக்கப்படாமல் இருந்ததால், நினைவு ஆற்றலை வைத்து தான் அதன் மதிப்பை உணர முடியும். அதன் ஒவ்வொரு ராடையும் பார்க்கும் போது நினைவுத் திறன் தூண்டப்பட்டு, அதன் மதிப்பு உணரப்படுகிறது.

      அதிலுள்ள மணிகளின் இயக்கத்திற்கு ஏற்ப மதிப்பு மாறுபடுவதால், ஒவ்வொரு நிலையிலும் நினைவு ஆற்றல் தட்டி எழுப்பப்படுகிறது. கணக்கிடும் போது, ஒரே நேரத்தில் பல நிலைகளையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. முதலில் மணிகளின் மதிப்பை மூளை கணக்கிடுகிறது. பின்பு தான் விரல்கள் மணிகளை இயக்குகின்றன. மீண்டும் மீண்டும் வகை வகையான பயிற்சிகளைச் செய்யும் போது மூளையின் வேலைப் பளு அதிகமாகிறது. எனவே, மூளையின் செயல்பாட்டுத் திறன் கூடுகிறது. அதனால் செயலாற்றல் கூடி, நினைவுத் திறன் அதிகரிக்கிறது. ஒரு காலக் கட்டத்தில் அபாகஸ் கைக்கருவி இல்லாமலேயேயும் மனதால் கணக்கிட முடிகிறது.

      நினைவுத் திறன் என்பது கணக்கிட மட்டுமல்ல. வாழ்வின் அனைத்துச் சூழ்நிலையிலும் சிந்தித்துச் செயல்படவும் தான். அது ஒரு மனிதனின் கற்பனைத் திறனையும் கூட்டும்.

நினைவும் திறனும் :

      ஒவ்வொருவரும் தன் வாழ்விற்குத் தேவையான அனைத்து விவரங்களையும் தனது மூளையில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும் போது அதை அதி விரைவாக உபயோகிக்கும் அளவுக்கு நினைவாற்றல் தேவை. அதை ஈடுபாட்டுடன் கூடிய இந்த "அபாகஸ் பயிற்சி" நிச்சயமாக வழங்குகிறது.


      இதை மனதில் கொண்டு, சிறுவர்களும் பெரியோரும் அந்த அபாகஸ் பயிற்சியை கம்ப்யூட்டரிலும் சுயமாகப் பயிற்சி செய்யும் விதத்தில் இந்த "ஸன் ஈஸி அபாகஸ்" என்னும் மென்பொருளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதில் நீங்கள் இலக்கங்களுக்குத் தகுந்தாற் போல் தானே (Auto) இயங்கும் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயிற்சிகளைச் செய்து உங்களது நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். இது மிகவும் எளிமையான பயிற்சி முறை ஆகும்.

      இந்தப் பயிற்சியின் போது மாணவர்கள் செய்யும் வேலை (விரைவாக சிந்தித்து விடையளித்தல்) எல்லாவற்றையும் எந்த வித அந்நிய (Computer) சக்தியும் இன்றி முழுமையாக நீங்கள் தான் செய்ய வேண்டும். ஆனால் ஆசிரியர் செய்யும் வேலைகளை (கேள்விகளைத் தயாரித்தல், அந்த இலக்கங்களை அபாக்ஸ் சட்டத்தில் ஏற்றுதல், கால அவகாசம் கொடுத்தல், உங்கள் விடைகளைத் திருத்துதல், அவற்றிற்கு உரிய மதிப்பெண் கொடுத்தல் போன்றவற்றை) மட்டும் கம்ப்யூட்டர் கவனிக்கும்.

Large Image of Main   தலைப்பு (Main) : இங்கிருந்து தான் நீங்கள் விருப்பத் தேர்வு (Option), அடிப்படை (Basic), எவ்வாறு... (Howto...), சுயமுயற்சி (Practice), பழகுதல் (Training), பயிற்சி (More than Million Exercise). போன்ற களங்களுக்குச் (Fields) செல்ல முடியும். இதில் "பயிற்சி" (Exercise) களத்தைத் தேர்வு செய்தால், விருப்பத் தேர்வு (Option) தோன்றும்.

Large Image of Option   விருப்பத் தேர்வு (Option) : இதில் உங்களுக்குத் தேவையான பாடம் (Lesson), தரம் (Grade), நினைவுத் திறன் (Memory Power - Speed 10,000 ms to 1,500 ms), 15 நிலைகள் (இதில் "சுதந்திரம்" என்ற நிலை ஒரு கட்டுப்பாடற்ற நிலை ஆகும். இது நீங்கள் சரியாக விடையளிப்பது வரைக் காத்து இருக்கும். இங்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரு பொருட்டே இல்லை. கடைசி நிலை "நன்று" மிகவும் வேகமானது. சற்று கடினமானதுங்கூட.) போன்றவற்றைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். (இல்லையென்றால் ஏற்கெனவே எங்களால் தேர்வு செய்யப்பட்ட (Default) நிலையிலேயே பயிற்சி களத்திற்குள் சென்றுவிடும்.)

Large Image of Basic   அடிப்படை (Basic) : இதில் அபாகஸ் மணிச் சட்டத்தின் பாகங்கள், மணிகளின் (Upper Beads, Lower Beads) மதிப்பு மற்றும் அவற்றைக் கையாளும் விதம், இடது-கிளிக், வலது-கிளிக் செய்வது எப்படி போன்ற விவரங்கள், ஒவ்வொன்றையும் தனித் தனியே புரிந்துக் கொள்ளும் விதத்தில் உள்ளன. மேலும் இதிலுள்ள பட்டன்களிலோ, மணிகளிலோ இடது-கிளிக் / வலது-கிளிக் செய்து, மணிகளைக் கையாளும் விதத்தை நன்கு பயிற்சி செய்து கொள்ளலாம்.

Large Image of Howto...   எவ்வாறு... (Howto...) : இதில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணக்கீடுகள் உங்களது சொந்தக் கட்டுப்பாட்டிற்கு ஏற்ப, படிப்படியாக-ஒவ்வொரு இயக்கமும் தனித் தனியாக (Step-by-Step) உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். நன்குப் புரிந்துக் கொள்ளும் வரை கவனமாகக் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் பத்து லட்சத்திற்கும் அதிகமான பயிற்சிகளை நீங்கள் சிறப்பாகச் செய்து, அதன் பயனை நீங்களே அனுபவிக்க முடியும்.

Large Image of Practice   முயற்சி (Practice) : இதில் இது வரை நீங்கள் கற்ற கணக்கீடுகளை நினைவில் வைத்துக் கொண்டு, நீங்களே சொந்தமாக இலக்கங்களை ஏற்றி, சுயமாகப் பயிற்சி (Practice) செய்ய வேண்டும். இது எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால், நீங்கள் உங்களது இயல்பிற்கு ஏற்ப சுயமாக சுலபமாக பயிற்சி செய்ய முடியும். உங்களுக்கு உதவியாக "ஸன் எளிய வாய்ப்பாடு" (Sun Easy Table) கொடுக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அபாகஸில் உள்ள அனைத்துக் கணக்கீடுகளும் (1x1=1 to 9x9=81) இதற்கு உட்பட்டே இருக்கும். இந்த வாய்ப்பாட்டை மனதில் பதிய வைத்துக் கொண்டால் அபாகஸில் மிகவும் எளிதாக கணக்கிடலாம்.

Large Image of Training   பழகுதல் (Training) : இது ஒரு முக்கியமான பயிற்சி களமாகும். இங்கு நீங்கள் மிகவும் எளிதாக பயிற்சி செய்யலாம். உங்களது பாடங்களையும் அதன் தன்மைகளையும் தேர்வு செய்து பயிற்சியை ஆரம்பிக்கலாம். எல்லாப் பாடங்களையும் கலந்தும் பயிற்சி செய்யலாம். பயிற்சிக்கான எல்லா வினாக்களும் எங்களது ’வினா வங்கி’யிலிருந்து எந்தத் தடையும் இல்லாமல் உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும். இங்கு பயிற்சிக்கான எல்லா இலக்கங்களும் தானாகவே உரிய ராடுகளில் ஏறிக் கொள்ளும். நீங்கள் விடையை மட்டும் ஏற்றினால் போதும். உங்களது விடையை உடனே சரி பார்த்துக் கொள்ளலாம். இங்கு எல்லாமே உங்கள் சுயக் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். உங்களது உதவிக்காக "ஸன் ஈஸி டேபிள்" இந்த களத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் சிறப்பான அனுபவம் பெற முடியும்.

Large Image of Exercise   பயிற்சி (Exercise) : முதலில் உங்களது பெயரை (for Progress-Report) பதிவு செய்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் ஆரம்பத்தில் தேர்வு செய்ததன் அடிப்படையில் கேள்விகள் தானாகவே வரும். நேரத்தை வீணடிக்காதீர்கள். வேகமாக செயல் படுங்கள். உங்களது விடை உடனே சரி பார்க்கப்பட்டு, மதிப்பிடப்பட்டு, தொடர்ந்து புதிய கேள்விகள் வந்து கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் நீங்கள் "சுதந்திரம்" என்ற முதல் நிலையிலேயே பயிற்சி செய்யுங்கள். இது ஒரு கட்டுப்பாடற்ற நிலை ஆகும். நன்கு அனுபவமானப் பிறகு உங்கள் வேகத்தைப் படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம்.

Large Image of Report      தகுதிச் சான்றறிக்கை (progress-Report) : பயிற்சிக் களத்தில் 25 கேள்விகளை (Right/Wrong) நீங்கள் சந்தித்தால் மட்டும் இங்கு வரலாம். இங்கு உங்களது கடந்த கால அனைத்து செயல்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கும். இதை ஒப்பிட்டுப் பார்த்து, உங்களது வளர்ச்சியைத் தெரிந்துக் கொள்ளலாம். குறிப்பாக சராசரி நேரம் (Average Time) மற்றும் எடுத்த மதிப்பெண் (Points) போன்றவற்றை நன்றாக ஒப்பிட்டுப் பாருங்கள்.

நேரடி விற்பனை

     இந்தியாவில் "ஸன் ஈஸி அபாகஸ்" சிடியை விற்பனை செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்

 
(CD-ROM)



(CD-ROM)











© Sunprints, Chennai-India, 2010.
Web-Design : R. Sunder Raj (Sunprints, Chennai)